This Article is From May 20, 2020

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 58 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், காஞ்சிபுரத்தில் 14 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 26-ல் இன்று கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Highlights

  • தமிழகத்தில் புதிதாக இன்று 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
  • மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது
  • இன்று 26 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 743 பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதித்ததவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று 3 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களை தவிர்த்து தற்போது மட்டும் 7,219 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

Advertisement

இன்று மட்டும் கொரோனா தொற்று குணம் அடைந்து 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று மட்டும் 11,894 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதற்காக அரசு தரப்பில் 40 ஆய்வகங்களும், தனியார் தரப்பில் 23 ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. 

Advertisement

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 58 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், காஞ்சிபுரத்தில் 14 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 26-ல் இன்று கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement