This Article is From Jul 14, 2018

பள்ளியில் ஏற்பட்ட மோதலில் ஏழாம் வகுப்பு மாணவனின் முதுகு கிழிப்பு

ஒரு மாணவன் தன்னிடம் இருந்த பிளேடை வைத்து மற்றொரு மாணவனைத் தாக்கியதில், கழுத்தில் இருந்து முதுகு வரை கிழிந்தது.

பள்ளியில் ஏற்பட்ட மோதலில் ஏழாம் வகுப்பு மாணவனின் முதுகு கிழிப்பு
New Delhi:

டெல்லியின் புறநகர் பகுதியான பதார்பூரில் இயங்கி வந்த பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், ஏழாம் வகுப்பு மாணவனின் முதுகு பிளேடால் கிழிக்கப்பட்டது.

இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவன் தன்னிடம் இருந்த பிளேடை வைத்து மற்றொரு மாணவனைத் தாக்கியதில், கழுத்தில் இருந்து முதுகு வரை கிழிந்தது.

இதனையடுத்து, அந்த மாணவன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதை அடுத்து, அங்கு ஏராளமான தையல்கள் போடப்பட்டு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவன் கூறுகையில், சம்பவத்தின் போது அங்கிருந்த ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

(With inputs from agencies)

.