Read in English
This Article is From Feb 27, 2019

எல்லையில் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 8 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இந்த பகுதிகள் மிகுந்த எச்சரிக்கை கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Written by

ஸ்ரீநகர், ஜம்மு பகுதிகளில் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Highlights

  • பதற்றம் காரணமாக 8 விமானநிலையங்கள் மூடப்பட்டது.
  • எல்லையை நெருங்கி உள்ள அமிரதசரஸ் உள்ளட்ட பகுதிகள் மூடப்பட்டது.
  • இந்திய விமானப்படை மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து நடவடிக்கை.

வடக்கு மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட பகுதிகளில் விமானநிலையங்களை மூட உத்தரவிடப்பட்டது.

எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து விமானநிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி அ, ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் விமானநிலையங்கள் மூடப்பட்டது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இந்த பகுதிகள் மிகுந்த எச்சரிக்கை கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் எல்லை தாண்டி கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், இன்று காலை அத்துமீறி எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை, ஜம்மூ - காஷ்மீர பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானிகளை கைது செய்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தது.

Advertisement

இதேபோல், எல்லைகோட்டில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தானின் f-16 போர் விமானம் தாக்கப்படதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

புட்காம் பகுதியில் இந்திய விமானப்படை மீது பாகிஸ்தான் இன்று காலை நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், அமிர்தசரஸ், சிம்லா, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் ராணுவ விமானங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த தடை தற்பதோது விலக்கப்பட்டு, 8 விமானநிலையங்கள் மீண்டும் பயணிகள் செயல்பட்டிற்கு திறக்கப்பட்டது.

Advertisement