This Article is From Aug 06, 2019

உத்தராகாண்ட் மாநிலத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 8 குழந்தைகள் பலி

பள்ளி வேன் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 குழந்தைகள் பலியாகினர்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 8 குழந்தைகள் பலி

10 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். (Representational image)

New Tehri, Uttarakhand:

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்க்வால் மாவட்டத்தில் பள்ளி வேன் ஆழமான பள்ளத்தாக்கில்  விழுந்ததில் 8 குழந்தைகள் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

“இந்த சம்பவம் கங்சாலி சாலையில் மதன்னேகிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று தெஹ்ரி மாவட்ட மாஜிஸ்திரேன் வி.சண்முகம் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்களின் மீதமுள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். 

.