This Article is From Oct 13, 2018

குர்ஜா மலைச்சிகரத்தில் ஒன்பது மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

நான்கு கொரிய மலையேற்ற வீரர்கள் மற்றும் நான்கு நோபள வழிகாட்டிகள் தங்கியிருந்த பகுதியை பனிப்புயல் தாக்கியதில் கூடாரங்களுக்கு அருகிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

குர்ஜா மலைச்சிகரத்தில் ஒன்பது மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

குர்ஜா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் 9 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.

Kathmandu:

கடந்த சில வருடங்களில் மலையேற்றத்தில் நிகழ்ந்த மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று. தென் கொரியாவைச் சேர்ந்த ஒன்பது மலையேற்ற வீரர்கள் குர்ஜா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தனர்.

நான்கு கொரிய மலையேற்ற வீரர்கள் மற்றும் நான்கு நோபள வழிகாட்டிகள் தங்கியிருந்த பகுதியை பனிப்புயல் தாக்கியதில் கூடாரங்களுக்கு அருகிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களின் உடல்களை இன்று காலை மீட்பு குழுவினர் மீட்டனர். அப்பகுதியில் பலமாக காற்று வீசியதால் மீட்பு பணி தாமதப்படுத்தப்பட்டது.

தொடக்கத்தில் கொரியாவைச் சேர்ந்த ஐந்தாவது மலையேற்ற வீரர் காணவில்லை என்று கூறப்பட்டது. பிறகு மீட்புக் குழுவினர் அவரும் இறந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறினர்.

குர்ஜா மலைச்சிகரத்தை பனிப்புயல் தாக்கியபின் அப்பகுதியை அடைந்த முதல் நபர் ஹெலிகாப்டர் பைலட் சித்தார்த் குருங் ஆவார். அவர் கூறுகையில், கூடாரங்கள் கலைந்து கிடந்தன. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. சிலரது உடல்கள் ஆற்றுப்படுகையில் அருகில் கிடந்தன என்றார்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி சைலேஷ் தாப்பா கூறுகையில், குருங் சம்பவ இடத்திற்கு அருகிலேயே ஹெலிகாப்டரை நிறுத்தி, உள்ளூர் மக்களின் உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை எடுத்து வர முற்பட்டார். இருப்பினும் மோசமான வானிலையால் அது இயலவில்லை. இன்று மதியம் இரண்டாவது ஹெலிகாப்டரை அனுப்ப முயன்றோம் பலமான காற்றினால் இயலாமல் போனதாக அவர் தெரிவித்தார்.

நாளை மீண்டும் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு உடல்களை மீட்கும் முயற்சி தொடரப்படும் என்றார். இச்சம்பவத்தில் பிரபலமான் தென் கொரிய மலையேற்ற வீரர் கிம் சாங் ஹோ-வும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.