Rare medicinal fungus Yarsagumba is only found in the Himalayan mountains above 10,000 feet. (FILE PHOTO)
Kathmandu: நேபாளத்தின் டால்பா மாவட்டத்தில் ‘ஹிமாலயன் வயகரா' என பிரபலமாக அறியப்படும் அரிய மருத்துவ பூஞ்சையான் ‘யாசாகும்பா'வை சேகரிக்கும் போது ஒரே வாரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மாண்டுவில் வியாழக்கிழமை காவல்துறையினர் இதை தெரிவித்தனர்.
யாசகும்பா இமயமலையிலிருந்து 10,000 அடி உயரத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஒரு கிராம் ஹிமாலயன் வயகராவின் விலை 100 டாலராக அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளில் விற்கப்படுகிறது.
தனித்துவமான கம்பளிப் பூச்சியளவு உள்ள இந்த பூஞ்சையை சேகரிக்கும் முயற்சியில் 8 பேர் ஒருவாரத்தில் உயிரிழந்தனர். மோசமான வானிலையே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தாயுடன் சென்ற சிறு குழந்தையும் இதில் இறந்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் மருத்துவ முகாம் நடத்தி வருவதாகவும் 12க்கும் மேற்பட்ட யாசாகும்பாவை சேகரிக்கும் நபர்கள் மருத்துவ வசதி பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.