Dehradun (Uttarakhand): உத்தரகாண்ட் மாநில டேராடூனில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுமியை 5 மைனர் வயது சிறுவர்கள் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டேராடூனில் இருக்கும் சாஹஸ்பூரில் பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். இதையறிந்த 5 மைனர் வயது சிறுவர்கள், சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 12 ஆம் தேதி நடந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்க, அவர்கள் போலீஸுக்கு இந்த விஷயம் குறித்து தெரியபடுத்தியுள்ளனர்.
இந்த விஷயம் குறித்து டேராடூனில் எஸ்.பி சரிதா தோபால், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் எங்களிடம் நடந்த விஷயம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாக, மைனர் வயது பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதையொட்டி, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்கும்படி சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் 12 வயதுக்குக் கீழ் இருக்கும் சிறுமிகளை பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல, குறைந்தபட்ச தண்டனைக் காலமும் 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாகவும் மாற்றம் செய்யப்பட்ட வாய்ப்புள்ளது.
தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்குக் கீழ் இருப்பவர் என்பதால், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.