தலைமுடியை தானமாக அளித்த கோவை கல்லூரி மாணவிகள்.
New Delhi: புற்று நோயாளிகளுக்காக கல்லூரி மாணவிகள் 80 பேர் தங்களது தலைமுடியை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
மாணவிகளிடம் பெறப்பட்ட தலைமுடிகள், தலையில் வைக்கப்படும் விக் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும். அவை, புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படவுள்ளது.
இதனை பாராட்டியுள்ள தமிழக மகளிர் காங்கிரஸ், 'வழங்குவது என்பது தானத்தை மட்டுமல்ல, அது மாற்றத்தை வழங்குதையும் குறிக்கும். கோவை கல்லூரி மாணவிகள் 80 பேர் புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை வழங்கியுள்ளனர். இது நிதியுதவி செய்வதைக் காட்டிலும் மேலானதாகும்.' என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும், அதனைப் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
ஒருவர், 'இதுதான் சக்தி. இது எப்போதும் தேவிகளிடமிருந்துதான் மனித நேயத்திற்காக வெளிப்படும்' என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், 'மதிப்பு மிக்கவற்றை அவர்கள் தியாகம் செய்துள்ளனர்... சல்யூட்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பயனர், 'பாராட்டத்தக்க விஷயம்.. மெச்சத்தக்க காரியத்தை சமூகத்திற்காக செய்துள்ளீர்கள்' என்று கூறியுள்ளார்.
2018-ம் ஆண்டு தகவலின்படி இந்தியாவில் மட்டும் சுமார் 11 லட்சம்பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை 135 கோடியாக உள்ள நிலையில், மொத்தம் 22 லட்சம் புற்றுநோயாளிகள் இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ளது.