ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
New Delhi: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான மருந்து மாத்திரைகள் போதிய அளவில் இருப்பதாகவும், மக்கள் இதுகுறித்து அச்சம் ஏதும் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு உதவி தேவைப்பட்டாலும் அதனை செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளதென்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நட்டா உறுதி அளித்துள்ளார்.
சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலின்படி ஜெய்ப்பூரில் அதிக எண்ணிக்கையில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாஸ்திரி நகரில் மட்டும் 4 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 86 ஆயிரத்து 903 வீடுகளில் சர்வே நடத்தியுள்ளோம். கொசுக்கள் பெருகக்கூடிய 74 ஆயிரத்து 483 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.