This Article is From Oct 29, 2018

ரூ. 32 கோடி மதிப்புள்ள 8 கிலோ கிராம் ஹெராயின் பறிமுதல்

கூரியர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ரூ. 32 கோடி மதிப்புள்ள 8 கிலோ கிராம் ஹெராயின் பறிமுதல்

ஹெராயின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

New Delhi:

நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ எடைகொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நைஜீரியாவைச் சேர்ந்த ஆஸ்கார் (38), மற்றும் டெல்லியை சேர்ந்த சுர்ஜித் சிங் (27) என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது-

டெல்லி என்.சி.ஆர்., பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் போதைப் பொருள் கூரியர் மூலம் கடத்தி வரப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம். சர்வதேச சந்தையில் ரூ. 32 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளோம்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆஸ்கார் என்பவனுக்கு இன்னொரு நைஜீரிய நபர் ஹெராயின் அளித்துள்ளார். அவருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கிடைத்துள்ளது. இந்தப் பொருள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆஸ்கார் என்பவன் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹெராயினை அனுப்பி வந்துள்ளான். அவன் ஏற்கனவே 90 கிலோ எடை கொண்ட ஹெராயினை டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் கடந்த 6 மாதங்களாக விற்பனை செய்துள்ளான்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

.