Read in English
This Article is From Sep 19, 2020

மேற்கு வங்கம், கேரளாவில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ அதிரடி!

கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும்  பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த தேடுதல் பணியானது மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாதிலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், அதில் அப்பாவி மக்களை கொல்லவும் சதி செயல்களில் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை பற்றிய கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" "இந்த நபர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களில் தீவிரமயமாக்கப்பட்டனர் மற்றும் டெல்லி-என்.சி.ஆர் உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த தூண்டப்பட்டனர்" என்று என்.ஐ.ஏ கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும்  பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement