செவ்வாய்கிழமை வேஜல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் மலைப்பாம்பு நுழைந்தது. (Representative Image)
குஜராத்தின் வதோதார மாவட்டத்தின் ஒரு வீட்டில் கொல்லைப்புறத்தில் ஒன்பது அடி நீளமுள்ள மலைப்பாம்பு அங்கிருந்த பூனையை விழுங்கி பின்னர் வெளியே துப்பியது.
அங்கு உள்ளூரில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனத்தில் உதவியுடன் வனகாவல் அதிகாரியினால் பிடிக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை வேஜல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் மலைப்பாம்பு நுழைந்தது. அது அங்குள்ள ஒரு பூனை மீது விழுந்து விழுங்க முயன்றது என்றார் வன காவலர் விஜய் பர்மர் கூறினார்.
சில உள்ளூர்வாசிகள் பாம்பைக் கண்டதும் வனத்துறையை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். வனத்துறை உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
“மரக்குவியலின் பின்னால் இருந்த மலைப்பாம்பு பூனையை விழுங்க முயன்றது. ஆனால் அது மிகப் பெரிய அளவுடையது என்று தெரிந்ததும் துப்பிவிட்டது” என்று பர்மர் கூறினார்.
சுமார் ஒரு மணிநேரம் கடுமையான முயற்சிகளுக்கு பிறகு மலைப்பாம்பு மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news