சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயம் ட்ரெண்டாவது வழக்கம். பத்து வருட சேலன்ஞ்க்கு பின் தற்போது ட் ரெண்டாகி வருவது 90's கிட்ஸ் ரூமர்ஸ்தான் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் தங்களுடைய சிறுவயதில் சொல்லப்பட்ட மூடப் பழக்கத்தை உண்மை என்று நம்பிய சில வதந்திகளை #90'skidsrumors என்ற ஹேஷ்டேக்கில் சொல்லி ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரில் சொல்லப்பட்டு வரும் 90's கிட்ஸ் ரூமர் என்னென்ன என்பதை பார்க்கலாமா…
கொட்டையை முழுங்கிட்டா வயிற்றுல மரம் முளைக்கும்.
பாம்பை அடிச்சு கொல்லாம விட்டுட்டா, நம்மல ஞாபகம் வச்சு ஒரு நாள் கொத்திடும்.
நைட் தூங்குவதற்கு முன் எத்தனை மணிக்கு எழுந்திருக்கனும் என்று சொல்லிவிட்டு படுத்தால் பூச்சாண்டி மாறு வேசத்துல வந்து எழுப்பி கூட்டிட்டு போயிரும்.
அரிசி தின்னா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்.
ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்...
ரெட்டை மைனா பார்த்தா லக்கு...
Undertakerக்கு ஏழு உயிர்
2003 world cupல spring bat வச்சு ஆஸ்திரேலியா இந்தியாவ தோற்கடிச்சாச்சு
தாலி கட்டுன குழந்தை பிறக்கும்.
எம்ஜிஆர் சமாதி ல வாட்ச் சத்தம் கேட்குது.
இடி இடிக்கும்போது மூத்த பிள்ளை வெளியில் போகக் கூடாது.
மயில் ரெக்கையை புத்தகத்துல வச்சு அதில அரிசியும் போட்டு வச்சா… அது இன்னொரு குட்டி போடும்.
முட்டுனா கொம்பு முளைக்கும்
ஒரு ஆட்டோல பிட் நோட்டீஸ வீசிட்டே போவானுக. அத பொறுக்கி எடுத்து படிச்சா பாம்பு நாக மாணிக்கம் கக்குன கதைய போட்ருப்பானுக. இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன்னு பார்த்தா கடசில "இதே மாதிரி நோட்டீஸ் அடிச்சு நீயும் பரப்பி விடு இல்லாட்டி செத்து போயிருவ"ன்னு போட்ருக்கும்.
இப்படி பல ரூமர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இறைந்து கிடைக்கிறது கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு படிச்சா நல்ல வேலை கிடைச்சி நல்லா வாழலாம் என்று பல வதந்திகளாலே வளர்க்கப்பட்டவர்கள் 90's கிட்ஸ் தான். என்ன… ஒரு சோகம் என்றால் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் இன்று கிட்ஸ் இல்லை முரட்டு சிங்கிளாக மட்டுமே என்பதுதான்.