This Article is From Jul 14, 2018

900 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் சத்தீஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்டது

57 தங்க நாணயங்கள், ஒரு வெள்ளி நாணயம் மற்றும் ஒரு தங்க காதணி கொண்ட ஒரு பானை கோர்கோடி மற்றும் பெட்மா கிராமங்கள் இடையே கண்டுபிடிக்கப்பட்டது

900 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் சத்தீஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • 57 தங்க நாணயங்கள், ஒரு வெள்ளி நாணயம், ஒரு தங்க காதணி கிடைத்துள்ளன
  • நாணயங்கள் 12ஆம் மற்றும் 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை, என கூறப்படுகிறது
  • விதர்பாவை ஆண்ட யாத் வம்சத்தின் காலத்தில் இந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன
Raipur:

ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில், கொந்தகோன் மாவட்டத்தில் சாலை கட்டுமானத்திற்காக பூமியை தோண்டியபோது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கபட்டதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

57 தங்க நாணயங்கள், ஒரு வெள்ளி நாணயம் மற்றும் ஒரு தங்க காதணி கொண்ட ஒரு பானை ஜூலை 10-ம் தேதி அன்று கோர்கோடி மற்றும் பெட்மா கிராமங்கள் இடையே ஒரு சாலை கட்டுமானத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது, என மாவட்ட ஆட்சியர் நீல்காந்த் டெக்கம் கூறினார்.

கோர்கோடியின் பஞ்சாயத்து தலைவர் நேருலால் அந்த பானையையும் அதனுள் இருந்த பொருட்களையும் ஒப்படைத்தார், என்று ஆட்சியர் கூறினார்.

சில அடித் தொலைவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட அந்த பானையை பெண் தொழிலாளி ஒருவர் கண்டுபிடித்தார், அதனைத் தொடர்ந்து அதை மற்ற தொழிலார்கள் கிராமத்தினரிடம் கூறினர் என்று PTI க்கு டெக்கம் கூறினார்.

முதல் கட்ட விசாரனையில், நாணயங்கள் 12 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விதர்பா ஆட்சி(தற்போது மகாராஷ்டிராவில் உள்ளது) செய்த யாத் வம்சத்தின் காலத்தில் இந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டது என்று நாணயங்களில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்துகள் கூறுகின்றன.

இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பகுதியில் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய தண்டகரானியாவில் யாதவ் மாநிலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தொல்லியல் துறை மேலும் நாணயங்களை பற்றிய ஆய்வை செய்யும் என்று ஆட்சியர் கூறினார்.

.