This Article is From Jul 15, 2020

CBSE 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 91.46% தேர்ச்சி!- முடிவுகளை எப்படி அறிவது?

கடந்த ஆண்டு, மே 6 ஆம் தேதி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 91.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர்.

CBSE 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 91.46% தேர்ச்சி!- முடிவுகளை எப்படி அறிவது?

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
  • மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவு தேர்ச்சிப் பெற்றுள்ளனர்
  • சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவு தேர்ச்சி விகிதம் உள்ளது

சிபிஎஸ்இ, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இன்னும் அது சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதள்ளத்தில் வெளியிடப்படவில்லை. கடந்த கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 91.46 சதவீதம் பேர் தேர்த்திப் பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 18,85,885 மாணவர்களில், 18,73,015 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 17,13,121 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள்.

மாணவிகளில், 93.31 சதவீதம் பேரும், மாணவர்களில், 90.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளார்கள். மூன்றாம் பாலின மாணவர்களில் 78.95 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க், “அன்பார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே, சிபிஎஸ்இ, 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. http://cbseresults.nic.in இந்த இணையதளத்தில் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளவும்” என ட்வீட்டியுள்ளார்.

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் போலத்தான் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாயின. சிபிஎஸ்இ அமைப்பு, மதிப்பெண்கள் மூலமோ விகிதாச்சார முறைப்படியோ தேர்வுகளை மதிப்பிடுவதில்லை. மாறாக, கிரேட் முறை மூலம் தேர்வுகளை மதிப்பிடுகிறது. 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த முறை சிபிஎஸ்இ, 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை முழுவதுமாக நடத்தவில்லை. இதனால் புது வித மதிப்பிடும் முறையை உச்ச நீதிமன்றத்திடம் சமர்பித்தது சிபிஎஸ்இ. அதன்படி எந்தெந்த மாணவர்கள், அனைத்துத் தேர்வுகளையும் எழுதினார்களோ அவர்களுக்கு ஒவ்வொரு தேர்விலும் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வரும்.

3 தேர்வுகளுக்கு மேல் எழுதியுள்ள மாணவர்கள், அதே நேரத்தில் சில தேர்வுகளை எழுத முடியால் இருந்தால், அதிக மதிப்பெண்கள் வாங்கிய 3 தேர்வுகளின் சராசரி, மற்ற எழுத முடியாத தேர்வுகளுக்கு கொடுக்கப்படும். 

மொத்தமாகவே 3 தேர்வுகளை மட்டும் எழுதியுள்ள மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் பெறும் 2 தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு எழுதாத மற்ற தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?

-முடிவுகள் அறிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்: cbseresults.nic.in

-சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு லிங்க்-ஐ கிளிக் செய்யவும்

-பள்ளியின் கோட் மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும்

-சொடுக்கி முடிவைத் தெரிந்து கொள்ளவும்

கடந்த ஆண்டு, மே 6 ஆம் தேதி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 91.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். மொத்தமுள்ள 500 மதிப்பெண்களுக்கு 13 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்தனர். 
 

.