This Article is From Jun 03, 2019

96வது பிறந்தநாள்: கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

96வது பிறந்தநாள்: கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதியில் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

fim488s

தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

vdhg21po

தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு அவர்களது சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

idfe774

இதேபோல், திமுக தலைமை அலுவகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து காலை மு.க.ஸ்டாலின் அன்னாதானமும் செய்தார்.

qgparucg

இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. 

d5f98gao

பின்னர், மாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


 

.