This Article is From Apr 30, 2020

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா: மாநகராட்சி ஆணையர்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா: மாநகராட்சி ஆணையர்

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா
  • தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 33,050ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 94 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,162 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 1900 தள்ளுவண்டிகள் மற்றும் 1182 மினி டிரக்குகள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது. இதுவரை 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

4,65,400 டன் அளவுக்கு காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாதுக்காப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. விலைவாசிகளை கட்டுப்படுத்தும் வண்ணமும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 

கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றார்.

.