Chennai: சென்னையைச் சேர்ந்த 99 வயது முதியவர், தன் வீட்டில் குடியிருக்கும் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முதியவர் முன்னாள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். அவரது வீட்டில் பாதிக்கப்பட்டக் குழந்தையின் குடும்பம் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகின்றது. 7 குழந்தைகளுக்கு அப்பாவான முதியவருக்குச் சொந்தமாக சென்னையில் மட்டும் 5 வீடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவை அனைத்தையும் அவர் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டக் குழந்தை, தனக்கு வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் புகார் தெரிவித்த போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. பின்னர், ‘முதியவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என குழந்தை தெரிகிவிக்கிறது’ என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன் குழந்தையின் தந்தை, முதியவரிடம் சென்று சண்டை போட்டுள்ளார். இதையடுத்து, போலீஸ் முதியவரை கைது செய்துள்ளது.