This Article is From Apr 06, 2020

பரவும் கொரோனா : அழைப்புவிடுத்த பிரதமர் மோடி - ட்விட்டரில் வளம் வந்த ஹாஷ் டேக்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இருளை எதிர்த்துப் போராட ஒன்றுபட அழைப்பு விடுத்தார்

பரவும் கொரோனா : அழைப்புவிடுத்த பிரதமர் மோடி - ட்விட்டரில் வளம் வந்த ஹாஷ் டேக்கள்

ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் நேனே, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த முயற்சியில் சக இந்தியர்களுடன் இணைந்தனர்

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி விளக்குகளுடனான தனது புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
  • இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது
New Delhi:

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில், தங்களில் ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நேற்று, தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு கைகளில் விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏந்தி நின்றனர். 

நேற்று இரவு 9 மணியளவில், மக்கள் கைகளில் தீபங்களை ஏந்தியவாறு தங்கள் வீட்டு பால்கனிகளிலும் தாழ்வாரங்களிலும் வந்து, சில நிமிடங்கள் அங்கேயே இருந்தனர். இது உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. சிலர் வைரஸுக்கு எதிரான தீர்மானங்களை வாசித்தும், தேசபக்தி கோஷங்கள் கூறியும், இசைக் கருவிகள் வாசித்தும், பட்டாசு வெடித்தும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கானோர் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் படங்களையும் புகைப்படங்களையும் ட்வீட் செய்ததால் இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது. #9MinutesForIndia, # 9baje9minute, #Diwali போன்ற ஹாஷ் டேக்கள் நேற்று ட்விட்டரில் வலம்வந்தன. 

பிரதமர் மோடி விளக்குகளுடனான தனது புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
 

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அரசியல்வாதி ஜே.பி.நடா ஆகியோர் தங்கள் படங்களை ட்வீட் செய்த பல பிரபலமான நபர்களில் அடங்குவர். முகமது கைஃப், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் அவர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் நேனே, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த முயற்சியில் சக இந்தியர்களுடன் இணைந்தனர்.

பிரதமர் மோடியின் தாய் ஹீராபெனும் ஒரு மண் விளக்கை ஏற்றினார்.

Gujarat: Mother of PM Modi, Heeraben, lights an earthen lamp after turning off all lights at her residence. India switched off all the lights for 9 minutes at 9 PM today & just lit a candle, 'diya', or flashlight, to mark India's fight against #Coronavirus as per PM's appeal. pic.twitter.com/qPQqXAB6Jf

— ANI (@ANI) April 5, 2020

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார், "கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இருளை எதிர்த்துப் போராட" ஒன்றுபட அழைப்பு விடுத்தார்.

ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்று கிழமை உங்கள் அனைவரிடம் இருந்து 9 நிமிடங்கள் எனக்கு வேண்டும், உங்கள் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விடுங்கள். உங்கள் கைகளில் மெழுகுவர்த்திகள், விளக்குகள் மற்றும் செல் போனில் வெளிச்சத்தை 9 நிமிடங்கள் ஒளிரவிடுங்கள் என்று ஒரு வீடியோ மூலம் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி.  

"இந்த ஊரடங்கின் போது யாரும் தனியாக இல்லை, 130 கோடி இந்தியர்களின் கூட்டு வல்லரசு ஒவ்வொரு குடிமகனுடனும் உள்ளது" என்று அவர் கூறினார்.

நேற்று காலை, "#9pm9minute" என்று ட்வீட் செய்தார் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் நெருக்கடி வந்த பின் அவர் தேசத்திற்கு உரையாற்றிய மூன்றாவது உரை இது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி கடந்த மாதம் மக்கள் தங்கள் வீட்டு பால்கனிகளிலும், தாழ்வாரங்களிலும் நின்று கைதட்டி நன்றி கூறுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

.