This Article is From Jan 17, 2019

எச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

எச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று சிகிச்சைக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து, ரத்தம் வாங்கி ஏற்றியுள்ளனர்.

ரத்த தானம் அளித்த அந்த இளைஞர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக ரத்த சோதனை செய்த போது தான் தெரியவந்தது, அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது என்பது. இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் தான் ரத்த தானம் அளித்த ரத்த வங்கியில் தனக்கு எச்.ஐ.வி பாதப்பு இருப்பதை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே அந்த இளைஞரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்டது.

இதையடுத்து, கர்ப்பிணியின் ரத்தத்தை சோதனை செய்த போது அவருக்கும் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சாத்தூர் வாலிபர் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும், அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு திவீரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று அந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 45 நாட்களுக்கு பின்னரே பிறந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும்.

Advertisement
Advertisement