Read in English
This Article is From Sep 20, 2018

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தலையில் விழுந்த இரும்பு கம்பி! - அதிர்ச்சி வீடியோ!

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த இந்த விபத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
நகரங்கள் Posted by

இரும்புக் கம்பி விழுந்தவுடன், அந்த நபர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்

Bengaluru:

பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டடத்தில் இருந்து ஏணி வடிவிலான இரும்பு கம்பி ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது விழுந்தது. இந்த கோர விபத்து சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பெங்களூரு சுனகல்பேட்டை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டடம் ஒன்றின் 4வது மாடியில் இருந்து இரும்பு கம்பி ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி வண்டியில் இருந்து கீழே விழுந்த அந்த இளைஞர் எவ்வித அசைவுமின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து தற்போது அந்த வாலிபர் அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரும்புக் கம்பி விழுந்த நபர் தற்போது அபாய கட்டத்தலிருந்து மீண்டுள்ளார்

Advertisement

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த இந்த விபத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement