This Article is From Apr 17, 2020

மொட்டை மாடியில் பட்டம் விட்ட குரங்கு! நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியா

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதன் தோன்றினான் என்ற கூறுவார்கள். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சுசந்தா, ஊரடங்கால் பரிணாம வளர்ச்சி வேகம் அடைந்திருப்பதாக கிண்டலாக கூறியுள்ளார்.

மொட்டை மாடியில் பட்டம் விட்ட குரங்கு! நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியா

பட்டம் விடும் குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் விலங்குகள் செய்யும் சேட்டை குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. அப்படியொரு வீடியோ நெட்டிசன்கைள அதிகம் ஈர்த்திருக்கிறது.

மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு, குரங்கு பட்டத்தை விடுகிறது. இது தூரத்திலிருந்து பார்க்கும்போது பறக்கும் பட்டம் சிலருக்கு விமானம் போலவும், சிலருக்கு பறவை போலவும் காட்சி அளிக்கிறது.

இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
 
வீடியோவை பார்க்க...

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதன் தோன்றினான் என்ற கூறுவார்கள். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சுசந்தா, ஊரடங்கால் பரிணாம வளர்ச்சி வேகம் அடைந்திருப்பதாக கிண்டலாக கூறியுள்ளார். 

வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனைப் பார்த்து ரசித்துள்ளனர்.
 
.

குரங்கின் சேட்டை குறித்த நூற்றுக்கணக்கானோர் கிண்டலாக கமென்ட் அடித்துள்ளனர். 
 
மிகச்சிறந்த  வீடியோக்களில் ஒன்று என்றும், சரியான நேரத்தில் குரங்கை படம் எடுத்துள்ளனர் என்றும் நெட்டிசன் பாராட்டி வருகின்றனர். 
 
Click for more trending news

.