Read in English
This Article is From Mar 22, 2019

தமிழக அரசின் ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு..!- காரணம் இதுதான்

கடந்த மார்ச் 10 ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது

Advertisement
தமிழ்நாடு Edited by

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் தமிழகத்தில் நடக்க உள்ளன.

Chennai:

தமிழக அரசு சார்பில், வருமான கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி நிதியுதவி வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவும், வறட்சியை மனதில் கொண்டும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும்' என்று கூறினார். 

ஆனால் தமிழக கிரமாப்புற வளர்ச்சித் துறை, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கிராம்பபுறத்தில் இருக்கும் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாரர்கள் புகர் தெரிவித்திருந்தனர். மேலும், இப்படிச் செய்வதன் மூலம் அரசு பணம் தவறான முறையில் விநியோகிக்கப்படும் என்று கூறி, திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரினர். 

Advertisement

இது குறித்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அர்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மனதில் கொண்டு இந்தத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஏப்ரப் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த மார்ச் 10 ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் தமிழகத்தில் நடக்க உள்ளன.

Advertisement


 

Advertisement