சுனாமி குறித்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகுதான் சுனாமி தாக்கியுள்ளது
New Delhi: இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலு என்கிற நகரத்தில் சுனாமி வந்துள்ளது. ஏ.எஃப்.பி செய்தி ஊடகம் இந்தத் தகவலை நமக்கு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த டிவி சேனல் ஒன்று, பாலு நகரத்தில் சுனாமி வந்தபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் மக்கள் பலர் பேரலை வருவதைப் பார்த்து பயங்கொண்டு அலறியடித்து ஓடுவது பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்பப் பெற்றது.
ஆனால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகுதான் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதுவரை உயிர்சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.