This Article is From Jan 19, 2019

கண்ணையா குமாருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு..!

2016 ஆம் ஆண்டு, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கண்ணையா குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது

கண்ணையா குமாருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு..!

கண்ணையா குமாரைத் தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.

New Delhi:

டெல்லியில் இருக்கும் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ சங்கத் தலைவர் கண்ணையா குமாருக்கு எதிராக தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் டெல்லி போலீஸ் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம், “எப்படி ஒரு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்” என்று டெல்லி போலீஸிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

2016 ஆம் ஆண்டு, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கண்ணையா குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது டெல்லி காவல் துறை. கண்ணையா குமாரைத் தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குக் குறித்தான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றம் டெல்லி போலீஸிடம், ”மாநில சட்டத் துறையிடமிருந்து நீங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முறையான அனுமதி பெறவில்லை. பின்னர் எதற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியது. அதற்கு காவல் துறை, “இன்னும் 10 நாட்களுக்குள் சட்டத் துறையிடமிருந்து முறையான அனுமதி பெற்றுவிடுகிறோம்” என்று பதில் அளித்தது. 

தன் மீதான குற்றப்பத்திரிகை குறித்து கருத்து தெரிவித்த கண்ணையா குமார், “அரசியல் ரீதியான காரணத்தினாலேயே என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து காவல் துறை என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு நன்றி. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படி செய்யப்பட்டுள்ளது. என் நாட்டின் நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார். 

.