Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 19, 2018

முடிவுக்கு வருமா ஆர்.பி.ஐ - மத்திய அரசு மோதல்..? போர்டு மீட்டிங் தொடங்கியது

ரிசர்வ் வங்கியின் போர்டில், புதிய மாற்றங்களை செய்ய அரசு பரிந்துரைக்கும் என்று தெரிகிறது

Advertisement
இந்தியா Posted by

மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் மூலதனத்தைக் கேட்கிறது என்று கசியும் தகவலில் உண்மை இல்லை என்று குருமூர்த்தி கூறியுள்ளார். 

New Delhi:

இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்து உள்ளதாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆர்பிஐ போர்டு சந்திப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த சந்திப்பையடுத்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து தேசிய அளவில் பல தரப்பினர் உன்னிப்பாகப் பார்த்து வருகின்றனர். 

இது குறித்து முக்கிய 10 விஷயங்கள்:

  1. ரிசர்வ் வங்கியின் போர்டில், புதிய மாற்றங்களை செய்ய அரசு பரிந்துரைக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஆர்.பி.ஐ-யின் நடவடிக்கையை மேலும் கட்டுப்படுத்த முடியும் எனப்படுகிறது.
  2. எஸ்.குருமூர்த்தி, சுபாஷ் கார்க் மற்றும் ராஜிவ் குமார் ஆகியோரை ஆர்.பி.ஐ அமைப்பில் சேர்த்தது மத்திய அரசு தான். இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியை கட்டுக்குள் வைத்திருக்கு மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே பார்க்கப்படுகிறது.
  3. ஆர்.பி.ஐ-யிடம், 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கையிருப்பு இருக்கிறது. இதை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்று அரசு கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு ஆர்.பி.ஐ இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தான் இரு தரப்புக்கும் இடையில் மோதல் உருவானதாக சொல்லப்படுகிறது.
  4. குறைந்த மூலதனமும் அதிக கடனும் வைத்திருக்கும் வங்கிகள் குறித்து ஆர்.பி.ஐ எடுக்கும் நடவடிக்கையும் மத்திய அரசை எரிச்சலடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  5. சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு அதிக கடன் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதிலும் ஆர்.பி.ஐ-க்கு மாற்றுக் கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
  6. தற்போது நடைமுறையில் இருக்கும் ஆர்.பி.ஐ விதிமுறைகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. அதே நேரத்தில் விதிமுறைகளில் மாற்றம் இருக்கக் கூடாதென்று ரிசர்வ் வங்கி விரும்புகிறது.
  7. 'ஆர்.பி.ஐ வசமிருக்கும் கையிருப்பை பறிப்பது தான் மத்திய அரசின் நோக்கம். மற்ற காரணங்கெல்லாம் உண்மையானது அல்ல' என்று இந்த விவகாரம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 
  8. லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்க வேண்டுமென்று மத்திய அரசு விரும்புவதாகவும், அதற்காகவே பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
  9. 'மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் மறுப்பு தெரிவித்த போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு, ஆர்பிஐ சட்டப் பரிவின் 7வது ஷரத்தைப் பயன்படுத்தியது அரசு' என்று சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 
  10. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் கேட்கிறது என்று கசியும் தகவலில் உண்மை இல்லை என்று குருமூர்த்தி கூறியுள்ளார். 
Advertisement