இந்தோனேசியாவில் டெவில்ஸ் டியர் என்கின்ற இந்த இடம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
கடற்பரப்புக்கு அருகே, புகைப்படத்துக்கு மிகவும் ஹாயாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், அடுத்த சில நோடிகளில் வீசிய பேரலையில் அடித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேசியாவின் நுசா லெம்போங்கன் என்கிற தீவில் உள்ள டெவில்ஸ் டியர் என்கின்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ஷாங்காயிஸ்ட் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.
வீடியோவை காண:
வீடியோவில், கடலுக்கு அருகில் இருக்கும் பாறையின் விளிம்புக்குச் செல்லும் அந்தப் பெண், கைகளை பரப்பியபடி, கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். அடுத்த ஒரு சில கணங்களில் மிகப் பெரிய பேரலை அந்தப் பெண்ணை இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்கிறது. இந்த சம்பவம் குறித்தான வீடியோ ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது.
இந்த திகில் கிளப்பும் சம்பவத்தில் பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட பெண், அதிர்ஷ்டவசாம சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் டெவில்ஸ் டியர் என்கின்ற இந்த இடம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது எனப்படுகிறது.
Click for more
trending news