বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 03, 2018

கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து!

Calcutta Medical College Fire: இன்று காலை கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது

Advertisement
இந்தியா Posted by
Kolkata:

இன்று காலை கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 250 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து, தீயை அணைக்க முயன்று வருகின்றன. கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பல மாடிகள் இருக்கின்றன. அங்கிருந்து பல நோயாளிகள், ஸ்ட்ரெட்ச்சரில் எடுத்துச் செல்லப்படுவதை பார்க்க முடிந்தது. 

கொல்கத்தாவில் இருக்கும் மிகப் பழமையான மருத்துவமனைகளில் கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரியும் ஒன்று. அது 1948 ஆம் ஆண்டு நிறுவபட்டது. 

 

Advertisement
Advertisement