This Article is From Oct 01, 2018

கேரள வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர் சாலை விபத்தில் பலி!

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது முதலாவதாக உதவி செய்து மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்

கேரள வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர் சாலை விபத்தில் பலி!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது பலரைக் காப்பாற்றியவர் ஜினேஷ்

Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது முதலாவதாக உதவி செய்து மக்களை மீட்டவர்கள் மீனவர்கள். அந்த சமையம் மீனவர்களுள் ஒருவராக பலரைக் காப்பாற்றிய ஜினேஷ் என்ற 24 வயது வீரர் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜினேஷ் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு யாரும் உதவிக்கு செல்ல முடியாத நிலையில் ராணுவம் மீட்க வரும் முன்னரே மக்களுக்காக ஓடி வந்தவர்கள் அம்மாநில மீனவர்கள். கேரள மக்கள் அம்மாநில மீனவர்கள் ‘கரையோர வீரர்கள்’ என்றே அழைக்கின்றனர்.

மாநிலத்தின் சிறப்பு கடற்படையாகப் புகழப்படும் அம்மாநில மீனவர்கள் தான் ராணுவம் வரும் முன்னரே தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து சுமார் 65 ஆயிரம் மக்களை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்டனர். 

இதையடுத்து கேரள மீனவர்களைப் பாராட்டி அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ‘ ‘மீனவர்கள் தான் உண்மையான மீட்பர்கள்’ எனப் பாராட்டி 200 மீனவர்களுக்கு காவல்துறையில் கடலோரக் காவல்படையில் பணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீனவர்களுக்கு சான்றிதழ் அளித்துப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘மீனவர்கள் தங்களது பாதுகாப்பு, தங்களது குடும்பம், அரசு தங்களுக்கு என்ன செய்யும் என யோசிக்காமல் தகுந்த நேரத்தில் உதவி செய்தவர்கள்’ எனப் பாராட்டியுள்ளார். 

.