கலைஞர் டிவி, திமுக-வால் தொடங்கப்பட்டது. (கோப்புப் படம்)
New Delhi: கலைஞர் டிவி சேனல், தொடர்ந்து ஒளிபரப்பாவதற்காக ‘செக்யூரிட்டி க்ளியரன்ஸ்’ கொடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைக்கசகம் கொடுத்த பரிந்துரையின் பேரில் உள்துறை அமைச்சகம் இந்த ஆய்வை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு, மத்திய அரசு, புதிய தேசிய பாதுகாப்பு பாலிசையை கொண்டு வந்தது. இதையடுத்து தான் பாதுகாப்பு சார்ந்து ஒப்புதலை கலைஞர் டிவி-க்கு நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது உள்துறை அமைச்சகம்.
நமக்கு கிடைத்த தகவல்படி, கலைஞர் டிவி-க்கு 10 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி க்ளியரன்ஸ் கொடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது நடத்தப் போகும் ஆய்வின் மூலம் முடிவெடுக்கும்.
இந்த செக்யூரிட்டி க்ளியரன்ஸ் என்பது, சம்பந்தப்பட்ட டிவி சேனல் நடந்து கொண்ட விதம், அவர்களின் நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமா போன்ற காரணங்களை உள்ளடக்கிக் கொடுக்கப்படுவதாகும்.
இந்த விவகாரம் குறித்து திமுக-வின் மூத்த தலைவர் ஒருவரிடத்தில் பேசும் போது, ‘இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி தகவல் வரும் பட்சத்தில் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் டிவி, 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திமுக-வின் தலைவராக இருந்த கருணாநிதிக்கு, ‘கலைஞர்’ என்ற பெயரும் இருந்தது. அதையே தான், திமுக-வால் தொடங்கப்பட்ட டிவி சேனலுக்கும் சூட்டப்பட்டது.