This Article is From Sep 06, 2018

தேங்காய் எண்ணெய் ‘சுத்தமான விஷம்’ - வெளிநாட்டு பேராசிரியரின் கருத்தால் சர்ச்சை

தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேங்காய் எண்ணெய் ‘சுத்தமான விஷம்’ - வெளிநாட்டு பேராசிரியரின் கருத்தால் சர்ச்சை
NEW DELHI:

தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைகழக பேரசாரியர் ஒருவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் பல தேவைகளுக்காக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்யை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனியில் பல்கலைகழகம் ஒன்றில் நடந்த கருத்தரங்கில் மிஷெல்ஸ் பேசும்போது, "தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷமாகும். நான் தேங்காய் எண்ணையை அழகு சார்ந்த பொருட்களில் உபயோகிப்பது குறித்து பேசவில்லை. அதை உணவில் சேர்த்து கொள்வது குறித்து பேசுகிறேன். தேங்காய் எண்ணெய் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும் சதவீதம் மிகக் குறைவு. நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் மோசமானது தேங்காய் எண்ணெய்” என்று எச்சரித்துள்ளார்

தேங்காய் எண்ணெய் உடலுக்கு தீங்கானது என்று கூறுவது இது முதல்முறை அல்ல, கடந்த வருடம் அமெரிக்கவில் இயங்கும் இருதய நலன் சார்ந்து இயங்கும் தன்னார்வ அமைப்பு தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அதனை உணவில் சேர்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மருத்துவர் ராஜேஷ் முரளிதரன், “பொதுவாக அனைத்து விதமான எண்ணெய்களிலும் கொழுப்புகள் உள்ளன. எனவே, அளவு அதிகாம பயன்படுத்துவதை தவிர்த்து தேவையான அளவு பயன்படுத்த வேண்டும். இதில், தேங்காய் எண்ணெய்யையில் மட்டும் குறிப்பாக கொழுப்புகள் அதிகம் என கூற முடியாது” என்றார்

மேலும், பேராசிரியர் மிஷெல்ஸ் கூறிய கருத்துக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேரள விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

.