அந்த வாக்கியம் எழுத ஆறு மணி நேரம் ஆனது
நதியோரம், கடலோரம், வானில் என பல இடங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்துபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் ஒருவர் பனியில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
சிக்காகோ பூங்காவில் பாப் லேம்பா என்பவர்தான் இப்படி பனியில், ‘என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' என எழுதியுள்ளார்.
பாபின் காதலியான பெக்கி அந்த பூங்காவின் அருகிலுள்ள அலுவலக்கத்தின் 37 வது மாடியில் வேலை பார்க்கிறார். எனவே, அந்த 37 மாடி உயரத்தில் இருந்து தெரிய வேண்டும் என்பதற்காக 45 அடி உயரத்திலும் 31 அடி அகலத்திலும் அந்த வாக்கியம் எழுதப்பட்டது. அதனை எழுத 6 மணி நேரம் எடுத்தது.
‘அது எனக்குத்தான் என முதலில் நான் உணரவில்லை. பலர் அந்த வாக்கியத்தைப் பார்ப்பதைப் பார்த்துதான் நானும் பார்த்தேன். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது' என பெக்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அந்த காதலுக்கு பெக்கி சம்பத்தித்து விட்டார் என சிக்காகோ பூங்காவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click for more
trending news