உத்தராகாண்ட் மாநிலத்தில் சிறுத்தை ஒன்று மாடுகளை வேட்டையாட முயன்ற வீடியோ வைரலாகியுள்ளது
ஹைலைட்ஸ்
- உத்தராண்டில் அதிகளவு சிறுத்தைகள் உள்ளன
- குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை தாக்குதல் அரங்கேறுவது வாடிக்கை
- இம்மாத தொடக்கத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது
உத்தரகாண்ட் மாநிலத்தில் காவல்நிலையம் எதிரியிலேயே சிறுத்தை ஒன்று மாடுகளைத் துரத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சிறுத்தைகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள கார்வால் மாவட்டம் தேவ்பிரக்யாக் பகுதியில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையம் உள்ள சாலையில் மாடுகள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
அப்போது திடீரென்று மாடுகள் மிரண்டு கொண்டு ஓடின. சில விநாடிகளுக்குப் பிறகு தான் தெரிந்தது, சிறுத்தை ஒன்று மாடுகளை வேட்டையாட துரத்தி வந்துள்ளது. கடைசியாக வந்த மாடு நொடிப்பொழுதில் சிறுத்தைப் புலியிடம் இருந்து தப்பியது.
சிறுத்தைப் புலி சாலையோடு சாலையாக அமர்ந்து சில விநாடிகள் பாய்ந்து வேட்டையாடுவதற்கு தயாராகியது. ஆனால், அதற்குள்ளாக எல்லா மாடுகளும் அங்கிருந்து சென்று விட்டன. கண் இமைக்கும் நேரத்தில் சிறுத்தைப் புலி ஓட்டம் பிடித்தது.
இந்தச் சம்பவம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் இது போன்று சிறுத்தை தாக்குதல் சம்பவம் அரங்கேறுவது வாடிக்கையான ஒன்று தான் என்றும், அம்மாநிலத்தில் அதிகளவு சிறுத்தைகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாக பரவி வர, பலரும் அதனை ரிடுவீட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு, இம்மாத தொடக்கத்தில், உத்தரகாண்டின் நைநிடால் என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று, வீட்டிற்குள் புகுந்து நாயை வேட்டையாடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ரந்தம்போர் தேசிய பூங்காவின் கூற்றுப்படி, சிறுத்தை அபாயகரமான விலங்காக இருந்தாலும், இந்தியாவில் அதன் எண்ணிக்கை குறைந்து வருவதால், IUCN சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், சில பேர் சிறுத்தையின் தோல் மற்றும் உடல் பாகங்களுக்காக அதனை வேட்டையாடி வருகின்றனர். சிறுத்தை வாழ்வாதாரம் இழக்கும் போது குடியிருப்பு பகுதியிலும், வேளாண் மண்டலங்களிலும் வந்து விடுகிறது. அவ்வாறு வரும் போது மனிதர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது.
Click for more
trending news