இந்த சம்பவத்தை அடுத்து, பல சர்வதேச விலங்குகள் நல அமைப்புகள், ‘சிங்கங்களை வைத்து சர்க்கஸ் காட்சி நடத்தப்படுவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றன.
உக்ரைனில் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தபோது, மேடையில் இருந்த சிங்கம் ஒன்று தனது ட்ரெயினரையே தாவி கடித்துள்ளது. இந்த பகீர் கிளப்பும் சம்பவம், உக்ரைனின் லுகான்ஸ்க் ஸ்டேட் சர்க்கஸில் நடந்துள்ளது. உக்ரைன் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ட்ரெயினரான ஹமதா கவுதாவைத்தான், சிங்கம் ஒன்று கடித்து வைத்துள்ளது. இது குறித்து டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மிகவும் தடபுடலாக நடந்த் சர்க்கஸ் காட்சியின்போது பார்வையாளர்கள், சிங்கம் வைத்து ஷோ செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு சிங்கம், கவுதாவைத் தாக்கியது. அவரது தோள்பட்டையில் கடித்தது அந்த சிங்கம். இதனால் நிலை தடுமாறியா கவுதா, கீழே விழுந்தார். திடீரென ஒலித்துக் கொண்டிருந்த இசை சட்டென நின்றது. கூடியிருந்த பார்வையாளர்கள் வாயடைத்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
வீடியோவை கீழே பாருங்க:
இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து கவுதா, மெட்ரோ செய்தி நிறுவனத்துக்கு, ‘சிங்கம் என் மீது பாய்ந்து கடித்திருந்தாலும், என் கழுத்துப் பகுதியில் அது கடிக்கவில்லை. நான் திமிறி எழுவே, சிங்கம் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டது. எனது தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, ‘இந்தத் தாக்குதலால் அன்றைய ஷோவை நாங்கள் ரத்து செய்யவில்லை. நான் மீண்டும் சிங்க ஷோவை முதலில் இருந்து ஆரம்பித்தேன்' என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, பல சர்வதேச விலங்குகள் நல அமைப்புகள், ‘சிங்கங்களை வைத்து சர்க்கஸ் காட்சி நடத்தப்படுவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றன.
இதைப் போன்ற ஓர் சம்பவம் சீனாவில் சென்ற ஆண்டு நடந்தது. அப்போதும் சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Click for more
trending news