பல வாரகால திட்டமிடல் , 370 லாரி லோடு பனிக்கட்டிகள் மற்றும் 10,000 டாலர் என பல விஷயங்கள் தேவைப்பட்டுள்ளது.
மேற்கு கனடாவில் உலகின் மிகப்பெரிய பனிக்கட்டியால் புதிர் அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. 2.78 லட்சம் சதுர கிமீ பரப்பளவில், 3 லட்சம் சதுரடியில் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது ஃபோர்ட் வில்லியம் ஹிஸ்டாரிக்கல் பார்க். இதற்கு முந்தைய சாதனையையும் இவர்கள் தான் வைத்திருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக க்ளிண்ட் மற்றும் மஸே செயிண்ட் அடோல்ப்க்கு வெளியே இந்த கட்டடத்தை கட்டிவந்தனர்.
பனிக்காலம் நீடிக்கும் என்பதால் கடந்த வருடம் இதற்கான திட்டத்தை தீட்டியதாக கூறினர். இதற்கான பாதை மற்றும் தடுப்புகளை பல மாதங்களாக கட்டமைக்க துவங்கினர்.
வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு குறைந்ததால் மக்கள்வரத்து அதிகரித்தது என்றும், ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல, பல வாரகால திட்டமிடல் , 370 லாரி லோடு பனிக்கட்டிகள் மற்றும் 10,000 டாலர் என பல விஷயங்கள் தேவைப்பட்டதாக கூறினர்.
பனிக்கட்டிகளை உருவாக்குவது அதிக செலவுடைய ஒரு விஷயம். இதற்கான கருவிகள், மோட்டார்கள், எரிபொருள் மற்றும் பணியாளர்கள் என பல விஷயங்கள் தேவைப்படும்.
இதற்கெல்லாம் மேலாக இதில் வடிவமைப்பு சவால்களும் இருக்கும் என்றனர்.
இதனை செய்யும் போது எல்லாவற்றிலும் இரண்டு சுவர்கள் உள்ளன. அதனை செய்வது கடினமான விஷயம். என்றா மேஸே.
இதனை வடிவமைக்க கம்யூட்டர் உதவியுடனான வரைகலை சாஃப்ட்வேரை பயன்படுத்தியுள்ளனர்.
பனிச்சிலைகள், போட்டியை முடிக்கும் முன்பாக வார்ம் அப்கள் என அனைத்தும் நிரம்பியதாக இருக்கும் என்றார்.
30-45 நிமிடம் செலவழிக்கும் இந்த இடம் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் பார்வையாளர்கள். வாரத்துக்கு 10000 பார்வையாளர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.