Read in English
This Article is From Oct 20, 2018

இந்த குழந்தைக்கு புலிக்குட்டிதாங்க உயிர் நண்பன்..!

சன் சீஃஜீங், என்னும் உயிரியல் பூங்கா காப்பாளரின் மகள், பூங்காவில் பிறந்த புலிக்குட்டியுடன் நட்பு பாராட்டி வருகிறார்

Advertisement
விசித்திரம்

3 மாத புலிக்குட்டியுடன் நெருக்கமாக விளையாடி வருகிறார் சன்

சீனாவின் தென்மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி இப்போது இணையத்தின் புதிய சென்ஷேன். காரணம், அச்சிறுமியின் அதாரமான நண்பன் ஒரு புலிக்குட்டி என்பதுதான்.

சன் சீஃஜீங், என்னும் உயிரியல் பூங்கா காப்பாளரின் மகள், பூங்காவில் பிறந்த புலிக்குட்டியுடன் நட்பு பாராட்டி வருகிறார். புலிக்குட்டி பிறந்தது முதல் அதனுடன் விளையாடி வருகிறார் சன். அவர்கள் இப்போது இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர் என்று சீன பத்திரிகையான “தீ மார்னிங் சன்” தெரிவித்துள்ளது.

குயுன்ஷோ நகரில் உள்ள தோங்கு உயிரியல் பூங்காவின் காப்பாளரான சன்னின் தந்தை இது குறித்து கூறுகையில், ‘அவள் அக்குட்டிக்கு புட்டிப் பால் கொடுப்பதில் தொடங்கி - குளிக்கை வைப்பது வரை எல்லாவற்றையும் செய்வாள்' என்றார் பூரிப்புடன். சன் சீஃஜீங் இப்புலிக்குட்டிக்கு “கூயுனு” எனப் பெயரிட்டுள்ளார். அதற்கு சீன மொழியில் புலிப் பெண் என்று பொருள்.

‘என் மகளின் நண்பர்கள் கூயுனுவைக் கண்டு பயப்படுவார்கள். கூயுனு என் மகளின் நல்ல தோழி ஆவாள். கூயுனுவுக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். என் மகள் பள்ளியில் இருந்து வந்த உடன் விளையாடுவது கூயுனுக்கு மிகவும் பிடிக்கும்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சன்னின் தந்தை.

அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடும் காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரபட்டு வருகின்றன. கூயுனுவுக்கு பற்கள் கடினமாகத் தொடங்கிய உடனேயே, அதைக் கூண்டில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement