Read in English বাংলায় পড়ুন
This Article is From Jan 16, 2019

சிபிஐ இயக்குநராக நாகேஷ்வர ராவ் தொடர்வாரா?- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அலோக் வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள், தனது பதவியை ராஜினாமா செய்தார்

Advertisement
இந்தியா

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மனுதாரர் சார்பில் வாதாட உள்ளார். 

Highlights

  • நாகேஷ்வர் ராவ், இடைக்கால சிபிஐ இயக்குநராக செயல்பட்டு வருகிறார்
  • அலோக் வெர்மா நீக்கத்துக்குப் பிறகு ராவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது
  • பிரசாந்த் பூஷன், ராவிற்கு எதிரான வழக்கில் வாதாட உள்ளார்
New Delhi:

சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் நாகேஷ்வர ராவ். இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை செய்யப்பட உள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர், சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரதமர் மோடி அமைத்தக் குழுவில் அவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். குழு சார்பில் வெர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதில் கார்கே, வெர்மாவின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, வெர்மாவை நீக்க சம்மதம் தெரிவித்தனர் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு தீயணைப்புத் துறையில் பணி மாற்றம் செய்யப்பட்டது.

அலோக் வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த வெள்ளிக் கிழமை நாகேஷ்வர ராவ், இடைக்கால சிபிஐ இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். ராவ், இயக்குநராக பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அலோக் வெர்மா பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். 

Advertisement

நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் தொடர்ந்து இப்படி பிரச்னை நிலவி வரும் நிலையில்தான் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தானாக முன் வந்து, நாகேஷ்வர ராவின் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு தாக்கல் செய்துள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மனுதாரர் சார்பில் வாதாட உள்ளார். 
 

Advertisement