This Article is From Jun 21, 2018

வதந்திகளிடம் இருந்து கிராமங்களை காக்கும் தெலங்கானா பெண் எஸ்.பி

வாட்ஸாப் பகிரப்படும், மெசேஜ்களை கட்டுப்படுத்த மாற்றங்களை செய்து வருகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம் என்கிறது வாட்ஸாப்

வதந்திகளிடம் இருந்து கிராமங்களை காக்கும் தெலங்கானா பெண் எஸ்.பி

ஹைலைட்ஸ்

  • குழந்தை கடத்தல் வதந்தியால் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஒரு நாளுக்கு 1300 கோடி மெசேஜ்கள் வாட்ஸாப்பில் பகிரப்படுகிறது
  • அமெரிக்க தேர்தலில் போலி செய்திகளின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வதந்திகளிடம் இருந்து கிராமங்களை காக்கும் தெலங்கானா பெண் எஸ்.பி
குழந்தை கடத்தல் வதந்தியால் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஒரு நாளுக்கு 1300 கோடி மெசேஜ்கள் வாட்ஸாப்பில் பகிரப்படுகிறது
அமெரிக்க தேர்தலில் போலி செய்திகளின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வளம் வரும் போலி செய்திகள் உலகத்துக்கே பெரும் தலைவலியாக இருக்கிறது. திடீர் பதற்றத்தை ஏற்படுத்தி கொலை வரை செல்லும், போலி செய்திகளை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆனால், தன் கண்காணிப்புக்குள் இருக்கும் 400 கிராமங்களில், போலி செய்திகளால் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக, மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார், தெலங்கானா காவல் துறை எஸ்.பி ரெமா ராஜேஷ்வரி.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தை கடத்தும் கும்பல் வளம் வருவதாக், கிடைத்த போலி செய்திகளை நம்பி 6 பேர் வரை கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தடுக்க பல்வேறு பிரச்சாரங்களை கையில் எடுத்திருக்கிறார், ராஜேஷ்வரி.
அனைத்து கிராமங்களுக்கு சென்று நேரடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இசை கச்சேரிகள் மூலம், கிராமம் கிராமமாக விழுப்புணர்வு பாடல்கள் மூலம், செய்திகளை உறுதி செய்வது எப்படி என்பது போன்றவை மக்களிடம் எடுத்துரைக்கப்படுகின்றன.

அப்படி ஒரு கிராமத்தில் பிரச்சாரத்துக்கு வந்திருந்த எஸ்.பி ராஜேஷ்வரி, மக்களிடையே பேசினார். “ சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்யாமல், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள். அது போன்ற செய்திகளை பகிராதீர்கள். உங்கள் ஊருக்கு புதிதாக யாராவது வந்தால், சட்டத்தை கையில் எடுக்காதீர்கள். அவர்களை தாக்க முயற்சிக்காதீர்கள்.” என்று மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.


 
telangana cop

எஸ்.பி ராஜேஷ்வரி அவர்களின் கண்காணிப்பில் உள்ள, பால்முரு பகுதியில் உள்ள கிராமங்களில், சமீப காலமாக வதந்திகள் அதிகம் பரவத் தொடங்கியது. ஊர் மக்கள், கட்டைக் கம்புடன் ஊர் காவலில் ஈடுபடும் அளவுக்கு, அவர்களிடம் வதந்தி பரவியிருந்தது. மேலு, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில், இப்பகுதி கிராம மக்களின் கல்வி அறிவு 50 சதவிகதத்துக்கும் கீழ் உள்ளது. அரசியல் ரீதியாகவும், பிரச்னைகள் நிறைந்த பகுதி என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்க்காமல் இருக்க ராஜேஷ்வரி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜேஷ்வரி அவர்களின் இந்த முயற்சியை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்ற தெலங்கானா காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்னதான், ராஜேஷ்வரி அவர்கள் முயற்சி எடுத்து வந்தாலும், இந்தியா முழுவதும், ஒரு நாளில் பகிரப்படும் 1300 கோடிக்கும் மேலான வாட்ஸாப் மெசேஜ்களை அவரால் தடுக்க முடியாது.

telangana cop

“வதந்திகளை தடுக்க, தொழில்நுட்ப ரீதியில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். வாட்ஸாப் குரூப்களில் பகிரப்படும், மெசேஜ்களை கட்டுப்படுத்த மாற்றங்களை செய்து வருகிறோம். மக்கள், வதந்திகளை கண்டறிய, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டங்கள் வகுத்து வருகிறோம்” என்கிறது வாட்ஸாப் நிறுவனம்.

 

 
telangana cop

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரை விளையாடிய போலி செய்திகள், இணைய உலகின் அடுத்த பெரும் தலைவலி. சைபர் அட்டாக்கின் மற்றொரு வகை தான் இந்த வதந்திகள். ஆட்சியையே மாற்றும் அளவுக்கு வதந்திகளுக்கு சக்தி உள்ளது. எனவே, நமக்கு வரும் செய்திகளில், போலி செய்திகளை கண்டறிந்து உறுதிபடுத்தி, மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்த்தால் மட்டுமே, வதந்திகளை தடுக்க முடியும்.

 

.