This Article is From Nov 22, 2018

பிரான்கோ முல்லக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாதிரியார்… எச்சரித்த சர்ச்!

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கத்தோலிக்க பாதிரியாருக்கு எதிராக போராட்டம் நடத்திய பாதிரியாருக்கு, சம்பந்தப்பட்ட சர்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது

பிரான்கோ முல்லக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாதிரியார்… எச்சரித்த சர்ச்!

திருவனந்தபுரத்தில் இருக்கும் கத்தோலிக்க சர்ச்சுகளின் செகரடிரியேடுக்கு முன்னர் பாதிரியார் ஆகஸ்தீன் ஓட்டலி போராட்டத்தை ஒருங்கிணைத்தார்

Thiruvananthapuram:

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கத்தோலிக்க பாதிரியாருக்கு எதிராக போராட்டம் நடத்திய பாதிரியாருக்கு, சம்பந்தப்பட்ட சர்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருக்கும் கத்தோலிக்க சர்ச்சுகளின் செகரடிரியேடுக்கு முன்னர் பாதிரியார் ஆகஸ்தீன் ஓட்டலி போராட்டத்தை ஒருங்கிணைத்தார். அவர் பாதிரியார் பிரான்கோ முல்லக்கலுக்கு எதிராக போராட்டம் செய்தார்.  

பாதிரியார் பிரான்கோ முல்லக்கல், 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார் என்ற பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு, பாதிரியார் பிரான்கோ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். 3 வாரங்கள் கழித்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் ஜலந்தருக்கு வந்தபோது, அவரின் ஆதரவாளர்கள் பிரான்கோவை மலர்தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரான்கோ மீது புகார் தெரிவித்த கன்னியாஸ்திரி, கோட்டயத்தில் இருக்கும் கான்வென்டுக்கு வந்தபோதெல்லாம் 13 முறை பாதிரியார் பிரான்கோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை பிரான்கோ மறுத்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து வாடிகனுக்கும் கடிதம் எழுதினார் அந்த கன்னியாஸ்திரி. இதையடுத்து ஜலந்தர் சர்ச்சின் பதவியை துறந்தார் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல்.

.