This Article is From Feb 20, 2019

'இந்தியர்களிடம் போதைப் பழக்கம்'- அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் ஆய்வறிக்கை!

2004 ஆம் ஆண்டில் 0.2 சதவிகிதமாக இருந்த ஹெராயின் உபயோகிப்பு, இந்த ஆண்டு 1.14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

'இந்தியர்களிடம் போதைப் பழக்கம்'- அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் ஆய்வறிக்கை!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்கும் இந்தியர்கள் குறித்தான இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவிற்கு சற்று தலைகுனிவைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

5.7 கோடி இந்தியர்கள் மதுவிற்கு அடிமையாகவும் 8.5 கோடி மக்கள் போதை பொருட்களை உபயோகிப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 75 வயதிற்குள் இருக்கும் மக்களில் 16 கோடி பேர் மது அருந்துபவர்களாக உள்ளனர் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

186 மாவட்டங்களில் 2,00,111 வீடுகளில் 4,73,569 மக்கள் இதற்காக நேர்காணல் செய்யப்பட்டனர். சத்தீஸ்கர், பஞ்சாப், கோவா, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள்தான் அதிக அளவில் மது உபயோகிக்கிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அதுல் அம்பேத்கர் கூறுகையில், 'சைக்கோ ஆக்டிவ் போதைப் பொருட்களான கஞ்சா, கொக்கெயின், ஒப்பியாட்ஸ் முதலியனவை இந்தியாவில் அதிகரித்துள்ளது. சைக்கோ ஆக்டிவ் போதைப் பொருட்கள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் கணக்கெடுப்பது இதுவே முதல்முறையாகும்' என்றார்.

மேலும் 2004 ஆம் ஆண்டில் 0.2 சதவிகிதமாக இருந்த ஹெராயின் உபயோகிப்பு, இந்த ஆண்டு 1.14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

சைக்கோ ஆக்டிவ் போதைப் பொருட்களை உபயோகிப்பதில் உத்தர பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஸ்டிரா, மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

.