Read in English
This Article is From Nov 11, 2018

‘கேதர்நாத்’ லவ் ஜிஹாதை ஊக்குவிக்கிறது: பாலிவுட் படத்துக்கு தடை கோரும் பாஜக!

படத்தின் போஸ்டரில், ‘காதல் ஒரு யாத்திரை’ என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

Advertisement
இந்தியா

கேதார்நாத் திரைப்படம் லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் விதத்தில் இருக்கிறது, அஜய்

Dehradun:

பாலிவுட்டில், ‘கேதர்நாத்' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. முஸ்லிம் ஆணுக்கும், இந்துப் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வது போன்ற கருவைக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வின் அஜேந்திர அஜய், சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கேதர்நாத்தில் நடந்த மிகப் பெரிய பேரழிவை சித்தரிக்கும் விதத்தில் ‘கேதர்நாத்' திரைப்படம் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டரில், ‘காதல் ஒரு யாத்திரை' என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

அதேபோல, லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் வகையில் முஸ்லிம் ஆணுக்கும் இந்துப் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இந்துவே கிடைக்கவில்லையா. இந்தப் படம் வெளியானால் பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். எனவே, சென்சார் போர்டு படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement