This Article is From Mar 28, 2019

தமிழகத்தில் மொத்தம் 868 வேட்புமனுக்கள் நிராகரிப்பு! - தேர்தல் ஆணையம்

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 868 வேட்புமனுக்கள் நிராகரிப்பு! - தேர்தல் ஆணையம்

1,587 மனுக்களில் 932 வேட்புமனுக்கள் ஏற்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோரின் 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 868 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 19-ம் தேதி முதல் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நிறைவு பெற்றுள்ளது.

தொடர்ந்து, நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். நாளை மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1,587 மனுக்களில் 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து, 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பது உட்பட பல தகவல்களை பெறலாம் என்றும் தெரிவித்தார்.

.