Read in English
This Article is From May 02, 2019

‘வீட்டிலேயே ட்ரெட்மில் செய்வது எப்படி?’- 2 கோடி தடவை பார்க்கப்பட்ட வைரல் வீடியோ

இந்த புதிய டெக்னிக்கை கற்றுத் தரும் வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கு உதவ வாய்ப்புள்ளது. 

Advertisement
விசித்திரம் Edited by

தனது வீடியோவுடன் அந்த ட்விட்டர் பயனர், ‘ஜிம்மிற்கு போக எனக்கு பணமில்லை’ என்று பதிவிட்டுள்ளார்

தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறதா. இல்லையென்றால், ஜிம்மிற்கு காசு கொடுத்த போக வசதி இல்லையா. இந்த புதிய டெக்னிக்கை கற்றுத் தரும் வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கு உதவ வாய்ப்புள்ளது. 

ட்விட்டர் பயனரான ‘Dej301' என்பவர், வீட்டிலேயே ட்ரெட்மில் செய்வது எப்படி என்பது குறித்து ஒரு வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தனது சமயலறையில் அந்த ட்விட்டர் பயனர், லிக்விட் சோப் ஒன்றை கொட்டுகிறார். பின்னர் இரு பக்கமும் கைகளை பிடித்து பேலன்ஸ் செய்து கொண்டு ஓட ஆரம்பிக்கிறார். அந்த சோப் வழுக்கும் தன்மையை கொண்டிருப்பதால், அவர் அதன் மீதே ஓடுகிறார்.

தனது வீடியோவுடன் அந்த ட்விட்டர் பயனர், ‘ஜிம்மிற்கு போக எனக்கு பணமில்லை' என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த வீடியோ படுவைரலாக மாறியுள்ளது. 

Advertisement

பலர் இந்த வீடியோவைப் பார்த்த, தங்கள் வீட்டிலும் அதையே செய்ய முயன்றுள்ளனர். அது குறித்த வீடியோவையும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இந்த வைரல் வீடியோ 2 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.  

வீடியோ கீழே:

Advertisement
Advertisement