ராகுல்காந்தியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது உடனடி நடவடிக்கை
Amethi: உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு விஜபி பாதுகாப்பு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியாக அமோதியில் இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்வதற்கா க நேற்று உத்தரபிரதேசம் சென்றார். அங்கு முசாபிர்கானாவில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அவர் ஓய்வெடுத்துள்ளார். இதனால் ராகுல் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்திற்கு உத்தரபிரதேச மாநில போலீஸார் பலத்த பாதுகாப்பு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் விருந்தினர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் ஒருவர் ராகுலின் சிறப்பு பாதுப்பு குழு அதிகாரியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த காவலர், உடனடியாக விஐபி பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சம்பவம் நடந்த நேரத்தில் அந்த காவலர் மது அருந்தியிருந்தாரா என்பதை சோதனை செய்வதற்காக அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அளிக்க வந்த சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரி சாதாரண உடையில் வந்ததாலே இந்த குழப்பம் ஏற்பட்டுளள்ளது. இதனால் பாதுப்பு குழு அதிகாரியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அந்த காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார் என்றார். மேலும், மருத்துவபரிசோதனையில் அந்த காவலர் மது அருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.