This Article is From May 03, 2019

‘இப்படியா இருக்கும் ஃபனி புயல்!’- களத்தில் எடுக்கப்பட்ட அலறல் வீடியோ #Video

Cyclone Fani: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

‘இப்படியா இருக்கும் ஃபனி புயல்!’- களத்தில் எடுக்கப்பட்ட அலறல் வீடியோ #Video

Fani Cyclone Update: காலை 8 மணி முதல் புரியில், ஃபனி புயல் கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

New Delhi:

இன்று காலை ஒடிசாவின் புரியில் கரையை கடக்க ஆரம்பித்தது ஃபனி புயல். காலை 8 மணி முதல் புரியில், ஃபனி புயல் கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ, புரியில் ஃபனி கரையை கடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. 

அரசமைப்பான பி.ஐ.பி வீடியோவுடன் சேர்த்து, ‘அந்த சத்தமும் அலறலும்: புரியில் கரையை கடக்கும் ஃபனி இப்படித்தான் இருக்கிறது' என்று பகிர்ந்துள்ளது. 

சில நொடிகளே ஓடும் அந்த வீடியோவில் அடைமழை, மரங்களை பிடுங்கி எறியுமளவிற்கான காற்று, காதுகளைப் பிளக்கும் அளவுக்கான புயலின் தாக்கம் உள்ளிட்டவை குறித்து அறிய முடிகிறது. 

வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி, ‘ஒடிசா கடற்கரையை 150 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து வருகிறது ஃபனி. சில இடங்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கிறது. புயலின் மையத்தின் சுற்றளவு 30 கிலோ மீட்டராகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபனி புயலினால், புரியில் கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புபனேஷ்வர் வரை ஃபனியின் தாக்கம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசா கடற்கரை மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. 

1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் புயலாக உருவெடுத்துள்ளது ஃபனி. 

ஒடிசாவில் இன்று ஃபனி புயல் கரையை கடக்க உள்ளதால், அம்மாநிலத்தில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஃபனி புயலை சமாளிக்க இந்திய கடற்படை 7 போர் கபல்களையும், 6 விமானங்களையும், 7 ஹெலிகாப்ட்டர்களையும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நிறுத்தி வைத்துள்ளது. 

.