சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகாவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Kolkata: கொல்கத்தாவிலிருந்து தோஹாவுக்கு செல்ல இருந்த கத்தார் விமானத்தின் மீது, தண்ணீ லாரி ஒன்று மோதியுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், இன்று அதிகாலை 3:15 மணி அளவில், 103 பயணிகளுடன் கொல்கத்தாவிலிருந்து தோஹாவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தண்ணீர் லாரி, விமானத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் விமானத்துக்கு சேதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்த 103 பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தைப் பழுது பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகாவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்ற மாதம் திருச்சியிலிருந்து புறப்பட்ட ஒரு ஏர் இந்தியா விமானம், ஏர்போர்ட்டின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து அறியாத விமானி, சுமார் 3 மணி நேரம் விமானத்தை ஆகாயத்தில் இயக்கியிருக்கிறார். விமானத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரியபடுத்தப்பட்ட உடன், மும்பையில் அவசரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொல்கத்தா விமான நிலைய சம்பவம் நடந்துள்ளது.