அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தை சேர்ந்த ஒரு வீட்டின் பின்புறத்தில் அரிய வகை இரட்டைத் தலை பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த இவ்வகை பாம்புபை வீட்டிலிருந்த தம்பதியினர் சலாடோ வனவியல் கல்வி நிலையத்தில் ஒப்படைத்தனர். அக்டோபர் 18ல் மக்களின் பார்வைக்கு வைக்கபட்ட இந்த வினோதமான பாம்பு, அதன் உடல்நிலையில் ஏதேனும் குறைவு ஏற்படும் வரையில் மக்களின் பார்வைக்கு வைக்கபடும் என வனவியல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படும் இச்செய்தி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது.
“நான் இரண்டு தலை பாம்புகளை காடுகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒருமுறை பார்பேன். ஆனால் இரட்டைத் தலைக் கொண்ட காப்பர்ஹெட் பாம்பு பார்பது இதுவே முதல்முறை” என்று ஆச்சரியமுடன் கூறியுள்ளார் ஹான் மேக் கீரகார், வனவியல் ஹர்பிடாலஜீ காப்பாளர்.
Click for more
trending news