Read in English
This Article is From Mar 14, 2019

தென்னாப்பிரிக்காவில் பூங்காவிலிருந்து எஸ்கேப் ஆன சிங்கத்துக்கு ‘சிறை தண்டனை’!

மிகவும் இள வயதுடைய அந்த சிங்கம், தேசிய பூங்காவில் இருந்த ஒரு சிறிய ஓட்டை மூலம் தப்பித்துள்ளது.

Advertisement
உலகம்

ஒரு மாதமாக அந்த சிங்கம் சுதந்திரமாக சுற்றி வந்த நிலையில், கடந்த புதன் கிழமை அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

Cape Town:

தென்னாப்பிரிக்காவில் காரூ தேசிய பூங்காவில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்னர் சிங்கம் ஒன்று தப்பியோடியது. அந்த சிங்கம் மீண்டும் பிடிபட்டதைத் தொடர்ந்து, பூங்காவிற்கு அனுப்புவதற்கு முன்னர் சிறையில் ஒருநாள் இரவு வைத்துள்ளனர். 

மிகவும் இள வயதுடைய அந்த சிங்கம், தேசிய பூங்காவில் இருந்த ஒரு சிறிய ஓட்டை மூலம் தப்பித்துள்ளது. ஒரு மாதமாக அந்த சிங்கம் சுதந்திரமாக சுற்றி வந்த நிலையில், கடந்த புதன் கிழமை அது இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதைச் சுற்றி வளைத்துப் பிடித்த பூங்கா நிர்வாகம், ஹெலிகாப்ட்டர் மூலம் சதர்லேண்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது, வேறு வழியில்லாமல் ஒரு நாள் இரவு சிறைக்குள் வைக்கப்பட்டது. 

இந்த விசித்திர சம்பவம் குறித்து காவல் நிலைய கமாண்டர் கேப்டன் மாரியஸ் மாலன், ‘உலகத்திலேயே ஒரு சிங்கத்தை சிறையில் அடைத்தது இதுவே முதல் முறையாக இருக்கும். நல்ல வேளையாக அன்று இரவு மனிதர்கள் யாரையும் அந்த சிறையில் அடைக்க வேண்டிய நிர்பந்தம் வரவில்லை. சிங்கம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. சிங்கத்துக்கு தற்போது இரண்டு வயதாகும் என்று நினைக்கிறோம். சீக்கிரமே நாங்கள் சிங்கத்தை பூங்காவில் சேர்த்து விடுவோம்' என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement