வாலிபரின் பெயர் சுஹெயல் அஹமத் கனாய் என்பதும், அவர் ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது
Srinagar: ஜம்மூ- காஷ்மீர் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று பதின் பருவத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், இன்று ஒரு வாலிபர் கடத்தப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாலிபரின் பெயர் சுஹெயல் அஹமத் கனாய் என்பதும், அவர் ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
நேற்று ஷோபியன் மாவட்டத்தில், ஹுசெய்ஃப் குட்டே என்கின்ற 19 வயது நபர், கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். குட்டே, குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அடுமணை தொழிலாளி ஆவார். குட்டேவையும் சேர்த்து, கடந்த சனிக்கிழமை 5 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட 5 பேரில் இருவர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மீதம் இருக்கும் இருவர் பற்றி இன்னும் தகவல் இல்லை.
கடந்த வியாழக்கிழமை, 17 வயது பள்ளிச் சிறுவன் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்புப் படையினருக்கு சிறுவன் உதவி செய்கிறான் என்று சந்தேகப்பட்டு தீவிரவாதிகள், அவரை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.