This Article is From Aug 03, 2018

மொபைலில் தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் மறுப்பு

இந்திய ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் பலரின் மொபைலில், ஆதாரின் மேல் சொன்ன சேவை எண் தானாகவே பதிவாகியிருந்தது கண்டு திடீர் குழப்பம் ஏற்பட்டது

New Delhi:

ஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவு செய்ய ஆதார் ஆணையம் வலியுறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஆதார் ஆணையம். தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியானது. அதை தான் ஆதார் ஆணையம் மறுத்துள்ளது.

“1800-300-1947 என்ற இந்த செயல்படாத பழைய இலவச சேவை எண்ணை ஆண்ட்ராய்டு மொபைல்களில் சேர்க்க ஆதார் ஆணையம் யாரிடமும் வலியுறுத்தவில்லை. சில விஷமிகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மேலும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சேவை தொலைபேசி எண் 1947 மட்டுமே” என ட்விட்டரில் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் பலரின் மொபைலில், ஆதாரின் மேல் சொன்ன சேவை எண் தானாகவே பதிவாகியிருந்தது கண்டு திடீர் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் ட்விட்டரில் மீண்டும் ஆதாருக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கின. கடந்த வாரம் தன் ஆதார் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டு டிராய் அமைப்பின் சேர்மேன் ஆர் எஸ் ஷர்மா, விடுத்த சவால் ஆதாருக்கு எதிராக பல விமர்சனத்தை ஏற்படுத்திய சம்பவம் முடிவதற்குள் மீண்டும் ஒரு ஆதார் தொடர்பான பிரச்சனை கிளம்பியுள்ளது.

.